/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஆக 21, 2025 11:15 PM
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியின் என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு, நல்வாழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். மாவட்ட குடும்ப நல நீதிமன்ற அமர்வு நீதிபதி கவிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், போதை பழக்கத்தால் மாணவர்கள் மட்டுமல்ல அவர்களது பெற்றோரும் சமுதாயம் பாதிப்பை சந்திக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களை பெற்றோர் தீவிரமாக கண்காணித்து அன்பாக திருத்த வேண்டும் என்றார். மின்னியல் துறை தலைவர் பாலசுப்ர மணியன் வரவேற்றார்.
முதன்மை நீதித்துறை நீதிபதி ஜேசுதாஸ், மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தின் செயலாளர் நீதிபதி பாஸ்கர், மாவட்ட உரிமையியல் நீதிபதி கேத்ரீன் ஜெப சகுந்தலா, வழக்கறிஞர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு தொடர்பான காணொளி காட்சி திரையிட்டு காண்பிக்கப்பட்டது. விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
முதுநிலை விரிவுரை யாளர் இளமுருகு நன்றி கூறினார்.