/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கத்தியைக் காட்டி மிரட்டிய போதை ஆசாமி
/
கத்தியைக் காட்டி மிரட்டிய போதை ஆசாமி
ADDED : ஏப் 07, 2025 06:59 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே ரயில்வே பாலத்தில் மது போதையில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியவரை கண்டு கொள்ளாமல் போலீசார் சென்றதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
ராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்திற்கு அடியில் உள்ள பக்கவாட்டு ரோட்டில் வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு மது போதையில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அப்பகுதியில் சென்ற மக்களிடம் பணம் பறித்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். அந்த இடத்திற்கு வந்த போலீசார் போதை ஆசாமியை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர். பின் அப்பகுதி மக்கள் சேர்ந்து போதை ஆசாமியை அங்கிருந்து விரட்டினர்.
இதனால் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மக்கள் நடமாட அச்சமடைந்துள்ளனர். போலீசார் வந்து பார்த்த போதும் அவரை எதுவும் செய்யாமல் சென்றதால் பொதுமக்கள் போலீசார் மீது கடும் அதிருப்தியடைந்தனர். இப்படி இருந்தால் மக்களுக்கு போலீசார் மீது எப்படி நம்பிக்கை ஏற்படும். புகார் தெரிவிக்க வருவார்கள் என சிலர் புலம்பியபடி சென்றனர்.

