ADDED : ஆக 14, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை:கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் எதிர்ப்பு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் எஸ்.ராஜசேகர் தலைமை வகித்தார். குற்றப்பிரிவு டி.எஸ்.பி., முருகதாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதைப் பொருளால் ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கினார்.
ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம், எஸ்.ஐ., சண்முகநாதன், மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்தனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சுலைமான், சதாம் உசேன், முனிய சத்யா செய்திருந்தனர்.