/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 29, 2025 05:21 AM
முதுகுளத்துா : முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி,அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தாசில்தார் கோகுலம் தலைமை வகித்தார். டி.எஸ்.பி.,சண்முகம், பேரூராட்சி தலைவர் ஷாஜகான் நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் முன்னிலை வகித்தனர். அப்போது காந்தி சிலையிலிருந்து தாலுகா அலுவலகம் பஸ் ஸ்டாண்ட், பஜார் உட்பட முக்கிய விதிகளில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். விழிப்புணர்வு கருத்தங்கம் நடந்தது. உடன் ஆசிரியர்கள் கண்ணன், தமிமுன் அன்சாரி, மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் நுாருல் அமீன், தர்மராஜ் செய் தனர்.