ADDED : ஜூலை 30, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை; கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சார்பில் உத்தரகோச மங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப் புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் சேக் தாவூது தலைமை வகித்து துவக்கி வைத்தார். துணை முதல்வர் கணேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
நான்கு வீதிகளின் வழியாக அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப் பட்டது. ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் மருதாச்சலமூர்த்தி மற்றும் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணா செய்திருந்தனர்.