ADDED : ஜன 14, 2025 08:02 PM

திருவாடானை:
திருவாடானை பகுதியில் பொங்கலை மேள தாளம், இனிப்பு வகையுடன் பெண்கள் வாசலில் கோலமிட்டு வரவேற்றனர்.
திருவாடானை பகுதியில் மார்கழியில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் கோலமிடுவது வழக்கம். கிறிஸ்துமஸ் அன்று மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக கிறிஸ்துமஸ் தாத்தா கேக் வெட்டுவது போல் வாசலில் கோலமிட்டனர். நேற்று (ஜன.14) பொங்கலை முன்னிட்டு மேளம், இனிப்பு வகையுடன் வாசலில் கோலமிட்டு வரவற்றனர். திருவாடானை தெற்கு ரதவீதியில் ஒரு வீட்டு வாசலில் விளக்கு, மேளம், லட்டு போன்ற படங்களுடன் பழையன கழிதலும், புதியன புகுதலும், வழி, வழி வந்த மரபு நமது போகி பண்டிகை, நமது கலாசாரம் என்ற வாசகத்துடன் கோலமிட்டிருந்தனர்.
பெண்கள் கூறுகையில், வாசலில் கோலமிடுவதால் இறை அருள் கிட்டுகிறது. பொறுமை, கற்பனை திறன், சந்தோஷம் ஏற்படுவதால் யோக பயிற்சி மாதிரி ஆகிறது. கோலத்தின் நடுவில் பூசணி பூ வைப்பது நல்லது. இந்த காலத்தில் அந்த பூவை பார்ப்பது அரிதாக உள்ளது என்றனர்.