/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதை டிரைவரால் ஆட்டோ மோதி மின்கம்பம் சேதம்
/
போதை டிரைவரால் ஆட்டோ மோதி மின்கம்பம் சேதம்
ADDED : ஏப் 01, 2025 05:54 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் போதை டிரைவர் ஆட்டோவை ஓட்டிச்சென்று மின் கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் விழுந்து மின்தடை ஏற்பட்டது.
ராமேஸ்வரம் மல்லிகை நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன் 36. இவர் நேற்று சுற்றுலாப் பயணிகளை சவாரி ஏற்றி இறக்கி விட்ட பின் மாலை 5:45 மணிக்கு வீட்டுக்கு ஆட்டோவில் அசுர வேகத்தில் சென்றுள்ளார்.
அப்போது மல்லிகை நகரில் சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பம் மீது திடீரென மோதினார். இதில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. ஆட்டோவும் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் திடீரென பெரும் சத்தம் எழுந்து மின்தடை ஏற்பட்டது.
வெடி விபத்து நடந்ததோ என நினைத்த மக்கள் வீடுகளில் இருந்து பதற்றத்துடன் வெளியில் வந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் புகார் செய்தனர். ராமேஸ்வரம் துறைமுகம் போலீசார் விசாரித்தனர்.
இதில் டிரைவர் முனீஸ்வரன் மது போதையில் ஆட்டோவை அசுர வேகத்தில் ஓட்டி வந்து மின்கம்பம் மீது மோதியது தெரிந்தது.