ADDED : மார் 11, 2026 04:32 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் சிலர் போதையில் பயணிகளிடம் வம்பு செய்வதால் பெண் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் மது, கஞ்சா அருந்தும் போதை ஆசாமிகள் சிலர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் வந்து பயணிகளிடம் வம்பு செய்கின்றனர்.
அதிக போதையில் பஸ்சிற்குள் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் சிலர் பணம் கேட்டும் தொந்தரவு செய்கின்றனர். இதனை கண்டிக்கும் கண்டக்டர், டிவைரர்களிடம் தகராறு செய்யும் சம்பவங்களும் நடக்கிறது. இவர்களின் தொந்தரவால் பஸ் ஸ்டாண்டிற்குள் பெண்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. பஸ் ஸ்டாண்டில் போதையில் பயணிகளிடம் தொந்தரவு செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -----------
