ADDED : ஆக 28, 2025 06:21 AM
திருவாடானை :  திருவாடானை ஒன்றிய அளவிலான பள்ளிகளுக்கிடையே துளிர் வினாடி வினா போட்டி திருவாடானை வட்டார வள மையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார்.
இளையோர், மூத்தோர், மிகவும் மூத்தோர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 18 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இளையோர் பிரிவில் காடாங்குடி அரசு நடுநிலைப்பள்ளியும், மூத்தோர் பிரிவில் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், மிகவும் மூத்தோர் பிரிவில் எஸ்.பி.பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருவாடானை வட்டார கல்வி அலுவலர் பாண்டீஸ்வரி சான்றிதழ் வழங்கினார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், பெற்றோர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அறிவியல் இயக்க ஆசிரியர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

