/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நலிவடைந்து வரும் வாத்து வளர்ப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை
/
நலிவடைந்து வரும் வாத்து வளர்ப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை
நலிவடைந்து வரும் வாத்து வளர்ப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை
நலிவடைந்து வரும் வாத்து வளர்ப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை
ADDED : ஜன 17, 2025 05:07 AM

திருவாடானை: வாத்து வளர்ப்பிற்கு போதுமான வரவேற்பு இல்லாததால் தொழில் நலிவடைந்து வருவதாக வாத்து வளர்ப்பவர்கள் கூறினர்.
திருவாடானை அருகே செலுகை உள்ளிட்ட சில கிராமங்களில் மதுரை, திண்டுக்கல் போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த சிலர் தங்கியிருந்து வாத்து வளர்க்கின்றனர். வாத்து வளர்க்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:
வாத்து வளர்க்கும் தொழிலை சிலர் இழிவாக பார்க்கும் மனநிலையில் உள்ளனர். ஊசி போட்டு கம்பெனி தீவனம் போட்டு வளர்க்கப்படும் பிராய்லர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இயற்கை முறையில் ரசாயன தீவனங்கள் வழங்கப்படாமல் வளர்க்கும் வாத்துகளுக்கு வரவேற்பு இல்லை.
வாத்து இறைச்சியும், முட்டையும் கேரளாவில் நன்றாக விற்பனை ஆகிறது. இப்பகுதியில் சிலர் இப்போது தான் வாத்து இறைச்சி சாப்பிடத் துவங்கியுள்ளனர். திருவாடானை பகுதியில் அறுவடை பணிகள் துவங்கியிருப்பால் மேய்ச்சலுக்காக வாத்துகளை இங்கு வந்து வளர்த்து வருகிறோம்.
அறுவடை செய்த நிலங்களில் உள்ள உதிரி தானியங்கள், புழு, பூச்சிகள், நத்தைகளை உட்கொள்கின்றன. வாத்து முட்டைகளை கேரள வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால் வாத்து வளர்க்கும் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது என்றனர்.