ADDED : மார் 29, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகள் கூண்டு வாகனங்களில் வந்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். வாத்து இறைச்சி விற்பனை அமோகமாக நடக்கிறது.
ஆடு, கோழி இறைச்சி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவகுணம் இருப்பதாலும், வாத்து இறைச்சியின் சுவையும் அலாதியாக இருக்கும் என்று சிலர் கூறினர். ஒரு ஜோடி வாத்து எடைக்கு ஏற்ப ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.