/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளைச்சல் குறைவால் தேங்காய் விலை உயர்வு கிலோ ரூ.44க்கு விற்பனை
/
விளைச்சல் குறைவால் தேங்காய் விலை உயர்வு கிலோ ரூ.44க்கு விற்பனை
விளைச்சல் குறைவால் தேங்காய் விலை உயர்வு கிலோ ரூ.44க்கு விற்பனை
விளைச்சல் குறைவால் தேங்காய் விலை உயர்வு கிலோ ரூ.44க்கு விற்பனை
ADDED : அக் 04, 2024 04:30 AM

பெரியபட்டினம்: போதிய மழையின்றி தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வெளியூர்களில் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்து கிலோ ரூ.44 ஆக அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம், ரெகுநாதபுரம், பத்திராதரவை, நயினாமரைக்கான், வண்ணாங்குண்டு, வாலாந்தரவை, உச்சிப்புளி, பெருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.
இப்பகுதியில் விளைவிக்கப்படும் தேங்காய்கள் எண்ணெய் உற்பத்திக்காக காங்கேயம், வெள்ளக்கோவில், ஈரோடு உள்ளிட்ட பகுதி தொழிற்சாலைகளுக்கு சரக்கு லாரிகளில் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக தொழிற்சாலை நலிவுற்றதால் தேங்காய் கொள்முதல் செய்வது தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது. பெரியபட்டினம் தென்னை விவசாயி பாலமுருகன் கூறியதாவது:
தென்னையில் இருந்து 60 நாட்களுக்கு ஒரு முறை காய் பறிக்கப்படுகிறது. தற்போது அதிக வெயில், குறைவான மழை காரணமாக பூச்சி தாக்குதலால் விளைச்சல் குறைவாக உள்ளது.
இதையடுத்து கிலோ பெரிய தேங்காய் ரூ.44க்கும், சிறிய ரக தேங்காய் ரூ.33 க்கும் வியாபாரிகளிடம் விற்கிறோம்.
நடப்பு ஆண்டில் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை தேங்காய் விலை உயர்ந்துள்ளது. வருங்காலங்களில் மழையை பொறுத்தே தேங்காய் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.