கமுதி:
கமுதி அருகே அபிராமம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய பருவமழை பெய்யாததால் நெல் விவசாயம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அபிராமம் அதனை சுற்றியுள்ள அ.தரைக்குடி, வல்லக்குளம், புனவாசல், நகரத்தார்குறிச்சி, வழிமறிச்சான் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவரி பயிராக நெல் விவசாயம் செய்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவசாய நிலத்தை உழவு செய்து நெல் விதைகள் விதைத்துஉள்ளனர்.
பருவமழையை எதிர்பார்த்து விவசாயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையடைந்துஉள்ளனர். விவசாயி முத்துராமலிங்கம் கூறியதாவது:
அபிராமம் அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000 ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் செய்து வந்தனர். பருவமழை போதிய அளவு பெய்யாததால் தற்போது விவசாயநிலங்களில் நெற்பயிர்கள் ஓரளவுதான் முளைத்துள்ளது.
அதில் பயிர்களுக்கு ஏற்றவாறு களைகளும் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போதிய மழை பெய்யாததால் ஒரு சில விவசாயிகள் போர்வெல் தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு நெல் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதனால் அபிராமம் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்றார்.