/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளாஸ்க் பொருட்கள் விற்னை அதிகரிப்பதால். கிடுக்குப்பிடி: உணவுத்துறை மாதம் ரூ.50,000 அபராதம் விதிப்பு
/
பிளாஸ்க் பொருட்கள் விற்னை அதிகரிப்பதால். கிடுக்குப்பிடி: உணவுத்துறை மாதம் ரூ.50,000 அபராதம் விதிப்பு
பிளாஸ்க் பொருட்கள் விற்னை அதிகரிப்பதால். கிடுக்குப்பிடி: உணவுத்துறை மாதம் ரூ.50,000 அபராதம் விதிப்பு
பிளாஸ்க் பொருட்கள் விற்னை அதிகரிப்பதால். கிடுக்குப்பிடி: உணவுத்துறை மாதம் ரூ.50,000 அபராதம் விதிப்பு
ADDED : டிச 27, 2024 04:43 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் கப், கவர்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் கட்டுப்படுத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாதம் ரூ.50ஆயிரத்திற்கும் மேல் கடைகளுக்கு அபாரதம் விதித்து நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கின்றனர்.
சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப், கவர்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிறு ஓட்டல்கள், கடைகள், மார்க்கெட், பஜார், இறைச்சி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பாலிதீன் கேரிபேக்குகளை தாராளமாக பயன்படுத்துகின்றனர். இவ்விஷயத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகளின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது.
குப்பை கொட்டும் இடங்கள், தொட்டிகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. சில ஊராட்சிகளில் குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர்நிலைகள், ஓடை வாய்க்கால்களில் பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளதால் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி அக்., நவ., டிச., மாதங்களில் கடைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதித்து மாதம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் வசூலித்துள்ளனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்த ஒட்டல்கள், வணிக நிறுவனங்களி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தடையை மீறும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்குகிறோம்.
டிச., 24 வரை 25 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.52ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தடையுள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம் என்றார்.-