/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளைநிலம் அருகே குப்பை கொட்டுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம்
/
விளைநிலம் அருகே குப்பை கொட்டுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம்
விளைநிலம் அருகே குப்பை கொட்டுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம்
விளைநிலம் அருகே குப்பை கொட்டுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம்
ADDED : ஜூலை 07, 2025 03:04 AM

கமுதி : கமுதி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை விளைநிலங்கள் அருகே கொட்டப்படுவதால் நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள வீடுகள் மற்றும் அரசு மருத்துவமனை, கடைகள் உள்ளிட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை முதுகுளத்துார் சாலையில் உள்ள குண்டாறு வரத்து கால்வாயில் கொட்டப்பட்டு வந்தது.
தற்போது கடந்த சில நாட்களாக கமுதியில் இருந்து வெள்ளையாபுரம், சிங்கப்புலியாம்பட்டி, கே.பாப்பாங்குளம் செல்லும் விலக்கு ரோட்டில் விளை நிலங்களுக்கு அருகே குப்பை குவிக்கப்பட்டு வருகிறது.
இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் இதன் அருகில் தனியார் நடுநிலைப்பள்ளி, கூட்டுறவு வாணிபக் கழகம் செயல்பட்டு வருவதால் இங்கு பொதுமக்கள் அதிகம் வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வரத்து கால்வாயில் குப்பை தேங்கும் நிலை உள்ளது.
சிங்கபுலியாம்பட்டி, வெள்ளையாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து பேரூராட்சி அலுவலத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பையை மாற்று இடங்களில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.