/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காற்றில் பறக்கும் துாசி மணல்; வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
/
காற்றில் பறக்கும் துாசி மணல்; வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
காற்றில் பறக்கும் துாசி மணல்; வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
காற்றில் பறக்கும் துாசி மணல்; வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
ADDED : ஜூலை 23, 2025 10:14 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் ரோட்டோரத்தில் குவிந்துள்ள துாசிமண் பலத்த காற்றில் பறப்பதால் வாகனங்களில் செல்லும் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். விபத்திற்கு முன் முழுமையாக மண்ணை அகற்ற வேண்டும்.
ராமநாதபுரம், பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரக்கோட்டை ஊராட்சிகளுக்கு உட்பட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பாரதிநகர், பட்டணம் காத்தான் வரை நடைபாதை அமைக்கவில்லை. இதன் காரணமாக ராமேஸ்வரம், மதுரை, துாத்துக்குடி நெடுஞ்சாலைகளில் மணல் குவிந்து தற்போது பலத்த காற்றில் பறக்கும் துாசி மண்ணால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் சிரமப்படு கின்றனர்.
வாகனங்கள் தடம் மாறி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் மணலை அகற்றிட மாவட்ட நிர்வாகம் உத்தர விட வேண்டும்.