/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கையால் தொட்டுவிடும் உயரத்தில் மின் கம்பி கண்டுகொள்ளாத மின்வாரியம்
/
கையால் தொட்டுவிடும் உயரத்தில் மின் கம்பி கண்டுகொள்ளாத மின்வாரியம்
கையால் தொட்டுவிடும் உயரத்தில் மின் கம்பி கண்டுகொள்ளாத மின்வாரியம்
கையால் தொட்டுவிடும் உயரத்தில் மின் கம்பி கண்டுகொள்ளாத மின்வாரியம்
ADDED : பிப் 18, 2025 04:51 AM

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே பத்திராதரவை கிராமத்தில் இருந்து ராஜவெளி கிராமத்திற்கு செல்லும் வழியில் ஏராளமான தோப்புகளில் இருந்து செல்லக்கூடிய மின் கம்பங்களின் கம்பிகள் தாழ்வாக கையால் தொடும் உயரத்தில் உள்ளதால் அவ்வழியாக செல்லும் கால்நடைகள், மக்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
இதுகுறித்து ரெகுநாதபுரம் மின்வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். ராஜவேளியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
தென்னந்தோப்பில் இருந்து செல்லும் மின் கம்பி சாலையோரத்தில் கைக்கு எட்டும் உயரத்தில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இது குறித்து ரெகுநாதபுரம் மின்வாரியத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.