/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி நீதிமன்றத்தில் இ-சேவை மையம் திறப்பு
/
கடலாடி நீதிமன்றத்தில் இ-சேவை மையம் திறப்பு
ADDED : ஜன 27, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி : -கடலாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதிய இ-சேவை மையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
கடலாடி புதிய இ-சேவை மையத்தினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக பொறுப்பு நீதிபதி சரவணன் திறந்து வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூபு அலிகான் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மோகன்ராம், கடலாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி சங்கீதா, வழக்கறிஞர் சங்க செயலாளர் பூமுருகன், பொருளாளர் பாண்டி பங்கேற்றனர்.

