/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலை இருபுறமும் சீமைகருவேல மரங்களால் விபத்து
/
கிழக்கு கடற்கரை சாலை இருபுறமும் சீமைகருவேல மரங்களால் விபத்து
கிழக்கு கடற்கரை சாலை இருபுறமும் சீமைகருவேல மரங்களால் விபத்து
கிழக்கு கடற்கரை சாலை இருபுறமும் சீமைகருவேல மரங்களால் விபத்து
ADDED : ஜன 30, 2024 12:10 AM

திருவாடானை -தொண்டி கிழக்கு கடற்கரை சாலையின் இருபக்கமும் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையானது தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர், நம்புதாளை, தொண்டி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் வழியாக செல்கிறது. கன்னியாகுமரி - சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது.
இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. உப்பூர், சோலியக்குடி, பாசிபட்டினம், தீர்த்தான்டதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் புதர் போல் மண்டிக்கிடக்கின்றன.
இதனால் இச் சாலையில் எதிரே கனரக வாகனங்கள் வரும் போது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் சாலையை மரங்கள் மறைத்துள்ளதால் விபத்துக்கள் நடக்கிறது.
ஓரியூர் சசிகுமார் கூறியதாவது: மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் திடீரென குறுக்கே செல்வதால் கட்டுபாட்டை இழந்து டூவீலர்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் சாலையோரம் படர்ந்த மரங்கள் வாகன ஓட்டிகளின் உடலை பதம் பார்க்கிறது. கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றார்.