/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகர் சாலையாக சுருங்கும் கிழக்கு கடற்கரை சாலை;: விபத்தால் பாதிப்பு ஆக்கிரமிப்புகள் அதிகம்

ADDED : ஜூலை 02, 2025 07:51 AM
கீழக்கரை; ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் வழியாக சாயல்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகளவு தொடர்கிறது.
குறிப்பாக நகர்ப்புறங்களில் சாலையோர கடைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதை போன்று கிழக்கு கடற்கரை சாலையில் ரோட்டோர கடைகளில் ஆக்கிரமிப்பு பெருகி வருகிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறங்களிலும் உள்ள இரும்பு கடைகள், ஓட்டல்கள், டூவீலர் மெக்கானிக் ஷாப்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள் அதிகளவு பெருகி வருகிறது. சாலையின் இரு புறங்களிலும் ஆண்டுக் கணக்கில் அகற்றப்படாத நிலையில் ஓடாத பழைய கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதைப் போன்று டூவீலர்களும் வரிசையாக அடுக்கி வைக்கப்படுகின்றன.
இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிகம் பயணிக்க கூடிய கனரக வாகனங்கள் அரசு பஸ்கள் போக்குவரத்து நெருக்கடியால் சிக்கி திணறுகின்றன. இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் தங்களது பேவர் பிளாக் கற்களை தார் சாலையின் வழியாக அதிகளவு பதித்து வைக்கின்றனர். இதனால் டூவீலரில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர்.
எனவே விஷயத்தில் வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் இடையூறு விளைவிக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.