/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்ரை சாலை ரயில் பாலம் பராமரிப்பு பணி: எரியும் விளக்குகள்
/
கிழக்கு கடற்ரை சாலை ரயில் பாலம் பராமரிப்பு பணி: எரியும் விளக்குகள்
கிழக்கு கடற்ரை சாலை ரயில் பாலம் பராமரிப்பு பணி: எரியும் விளக்குகள்
கிழக்கு கடற்ரை சாலை ரயில் பாலம் பராமரிப்பு பணி: எரியும் விளக்குகள்
ADDED : அக் 19, 2024 05:02 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரயில்வே பாலம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதால் தற்போது நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு செய்து விளக்குகளை ஒளிரச்செய்துள்ளது.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து துாத்துக்குடி செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலம் உள்ளது. பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிப்பு செய்யாமல் பாலத்தின் இரு புறங்களிலும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியவில்லை. வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது, என் படத்துடன் தினமலர் நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் இரு புறங்களிலும் வளர்ந்திருந்த செடிகளை அகற்றி, பாலத்தில் எரியாமல் கிடந்த விளக்குகளை எரியச்செய்துள்ளனர்.
தற்போது வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.