/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் கிழக்கு முத்தரையர் நகர் மக்கள்
/
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் கிழக்கு முத்தரையர் நகர் மக்கள்
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் கிழக்கு முத்தரையர் நகர் மக்கள்
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் கிழக்கு முத்தரையர் நகர் மக்கள்
ADDED : ஜன 20, 2025 07:26 AM

கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு முத்தரையர் நகரில் ரோடு வசதி, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்டவைகளை முறையாக செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு முத்தரையர் நகரில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். மன்னார் வளைகுடா கடற்கரையை ஒட்டியுள்ள கிராமத்தில் பக்கீரப்பா தர்காவில் இருந்து கிராமத்திற்கு செல்லக்கூடிய ஒரு கி.மீ., தொலைவிற்கான சாலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பதற்காக சரளை கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இதுவரை பணிகள் நடக்காமல் உள்ளது.
கிழக்கு முத்தரையர் நகர் பொதுமக்கள் கூறியதாவது: மூன்றாண்டுகளுக்கு முன்பு கொட்டப்பட்ட சரளை கற்கள் இன்று வரை ரோடு அமைக்காமல் அப்படியே வைத்துள்ளனர். இதனால் கடல் தொழிலுக்கு செல்லக்கூடிய மீனவர்களும், பள்ளி கல்லுாரிக்கு செல்லக்கூடிய மாணவர்களும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த ஓராண்டாக அமைக்கப்படாமல் கட்டுமான நிலையில் அப்படியே உள்ளது. ஒரு குடம் ரூ.10க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இரவு நேரங்களில் முறையாக கம்பங்களில் மின்விளக்குகள் எரிவது இல்லை.
எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.