ADDED : ஏப் 05, 2026 04:46 PM

அ நிறம் | அளவு
தொண்டி:தொண்டி அருகே காரங்காடு செங்கோல்மாதா சர்ச்சில் தவக்காலத்தின் இறுதி நாளான ஞாயிறு அதிகாலை உயிர்ப்பு (ஈஸ்டர்) விழா நடந்தது.
முன்னதாக பாதிரியார் ரெமிஜியஸ் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சம்பை புனித செபஸ்தியார் சர்ச், தொண்டி புனித சிந்தாதிரை சர்ச், குருமிலான்குடி புனித சுவக்கின்அன்னாள் சர்ச்சுகளிலும் ஈஸ்டர் விழா நடந்தது. இதுபோன்று ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை சர்ச் மற்றும் முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை சர்ச்சில் ஈஸ்டர் திருப்பலி நடந்தது.
