/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடித்திருவிழா எதிரொலி ;பூக்கள் விலை விர்...
/
ஆடித்திருவிழா எதிரொலி ;பூக்கள் விலை விர்...
ADDED : ஆக 04, 2025 12:35 AM
ராமநாதபுரம்; ஆடித்திருவிழா, ஆடிப்பெருக்கை முன்னிட்டு தேவை அதிகரித்துள்ளதால் ராமநாதபுரத்தில் மல்லிகை பூ விலை கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.200 அதிகரித்து ரூ.700க்கு விற்கப் பட்டது.
தமிழகம் முழுதும் நேற்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. இந்நாளில் நீர் நிலைகளில் நீராடி கோயிலுக்கு செல்வது வழக்கம். இதனால் வழக்கத்தை விட பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி ஒரு சில பகுதிகளில் மட்டும் நடக்கிறது. மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை சந்தைகளில் இருந்து அதிக அளவில் பூக்கள் இங்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக கிலோ மல்லிகை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படும். ஆடி மாத கோயில் விழாக்கள் மற்றும் நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் பூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் நேற்று கிலோ மல்லிகை ரூ.700-க்கு விற்கப்பட்டது. முல்லை ரூ.600, கனகாம்பரம் ரூ.750, செண்டுபூ ரூ.150, ரோஜா, செவ்வந்தி ரூ.400க்கும் விற்பனையாயின.