ADDED : மார் 15, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி காந்தி சிலை முன் இ.கம்யூ., சார்பில் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மாசிலாமணி பேசினார். அப்போது காஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐ.நா., சபையில் வாக்களித்ததை கண்டித்து கோஷமிட்டனர்.
மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் ராஜன், ஜீவானந்தம், ஜெயசீலன், லோகநாதன், சுப்பிரமணியன், ருக்குமாங்கதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
