/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இ.சி.ஆர்., ரோட்டோரம் குப்பை குவியலால் சிரமம்
/
இ.சி.ஆர்., ரோட்டோரம் குப்பை குவியலால் சிரமம்
ADDED : ஜன 29, 2024 05:18 AM

தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்படும் ஊராட்சி பிளாஸ்டிக் குப்பை காற்றில் பறப்பதால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை தேவிபட்டினம் அருகே முத்துரெகுநாதபுரம் விலக்கு பகுதியில் தேவிபட்டினம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை நிர்வாகம் கொட்டி வருகிறது.
ரோட்டில் இருந்து குறிப்பிட்ட பகுதியில் குப்பை கொட்டுவதற்கு இடங்கள் ஒதுக்கிய நிலையில் குப்பை ரோட்டோரம் கொட்டப்படுவதால் ரோட்டோரம் தேங்கியுள்ளது.
இவை லேசான காற்று அடித்தாலே காற்றின் திசையில் அடித்துச் செல்வதால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் ரோட்டோரம் தேங்கிய குப்பையிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அவ்வழியாக செல்லும் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பாதிப்படைகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டோரம் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.