தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம்

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம்

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம்


UPDATED : ஜூலை 15, 2026 04:45 PM

ADDED : ஜூலை 15, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 04:45 PM ADDED : ஜூலை 15, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்:முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே, சிறுவண்டல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜெரால்டு தலைமை வகித்தார். காமராஜர் கல்விக்கு ஆற்றிய, சேவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

ஆனந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் (பொ) குருநாதன் தலைமை வகித்தார்.

திருத்தேர்வளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நடந்த விழாவிற்கு இடைநிலை ஆசிரியர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். கொக்கூரணி ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் ஜான் ரவி தலைமையில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

சாத்தனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கீழ் மருதங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியர் முருகானந்தம் தலைமையில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

செவ்வாய்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையிலும், சனவேளி கல்யாணி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் தலைமையிலும், காவனக்கோட்டை ராமையா நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் பொறுப்பு கணேசன் தலைமையிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை (பொ)பகவதி அம்மாள் தலைமையிலும், மேல் பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மீனம்பர் தலைமையிலும், ஏ ஆர் மங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பிரேமா தலைமையிலும், வடக்கலுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமையிலும், காவனக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us