/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு கடன் சங்கத்தில் கல்வித்திட்டம் முகாம்
/
கூட்டுறவு கடன் சங்கத்தில் கல்வித்திட்டம் முகாம்
ADDED : ஏப் 25, 2025 06:24 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்,மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் இணைந்து நடத்திய சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடந்தது.
முகாமில் மதுரை மேலாண்மை பயிற்சி கழகத்தின் விரிவுரையாளர் சசீதரன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அச்சங்கத்தில் வழங்கும்கடன்கள், மதிப்பு கூட்டிய பொருட்கள் உற்பத்தி செய்தல் மற்றும் முதல்வர் மருந்தகங்கள் ஆரம்பிக்க மகளிர் முன் வந்தால் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்தும் விளக்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ராஜேஸ்வரி, சங்கச் செயலாளர் உமா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

