ADDED : ஜன 28, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளத்தில் நாடார் மகாஜன சங்க சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளி உள்ளது.
இங்கு பள்ளி மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வகுப்பறைக்கு தேவையான பீரோ, சேர், கடிகாரம் உள்ளிட்ட பல ஆயிரம் மதிப்பிலான தளவாடப் பொருள்கள் உள்ளிட்டவைகளை வீட்டில் இருந்து சுமந்து கொண்டு வந்து பள்ளியில் வைத்து காட்சிப்படுத்தினர். போலீஸ், பப்ளிக் ரிலேஷன்ஷிப் ஏர்வாடி கிளையின் சார்பில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

