/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில்வே சுரங்க பாதையில் கசிந்து தேங்கும் கழிவுநீர்
/
ரயில்வே சுரங்க பாதையில் கசிந்து தேங்கும் கழிவுநீர்
ரயில்வே சுரங்க பாதையில் கசிந்து தேங்கும் கழிவுநீர்
ரயில்வே சுரங்க பாதையில் கசிந்து தேங்கும் கழிவுநீர்
ADDED : டிச 14, 2024 05:31 AM

பரமக்குடி : பரமக்குடி - முதுகுளத்துார் ரோடு ரயில்வே சுரங்கப் பாதையில் கழிவுநீர் கசிந்து மழை நீருடன் சேர்ந்து 2 அடிக்கு மேல் தேங்குவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பரமக்குடி ஐந்து முனை, முதுகுளத்துார் ரோட்டில் ரயில்வே பாதையால் நெரிசல் ஏற்பட்டதால் 2013ல் மேம்பாலமும், 2019ல் சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறை மழையின் போதும் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியதால் ஆபத்தான சூழலில் கடக்கும் நிலை ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காணும் வகையில் தானியங்கி நீர் உறிஞ்சும் மோட்டார்கள் அமைக்கப்பட்டாலும் அவை செயல்பாடின்றி நகராட்சியால் தண்ணீரை வெளியேற்றும் நிலை தான் உள்ளது. இப்பகுதியில் செல்லும் நகராட்சி வாறுகால் தொட்டி பாலத்தால் கழிவுநீர் சுரங்க பாலத்தின் தடுப்பு சுவரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான ஓட்டைகளில் கசிகிறது.
இதனால் ஆண்டு முழுவதும் துர்நாற்றத்திற்கு மத்தியில் கழிவு நீரை கடந்து மாணவர்கள் உட்பட பொதுமக்கள் செல்கின்றனர்.
தொடர் மழை பெய்யும் நாட்களில் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதனால் தொற்று பீதியிலும், சுவர்களின் உறுதித் தன்மை பாதிப்பாலும் இப்பாதையை பயன்படுத்துவோர் தினம் தினம் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே துறை அதிகாரிகள் சுரங்க பாதையில் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.