/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி பசுமையாக்கும் திட்டத்தில் மரக்கன்றுகள் ரூ.10க்கு விற்பனை முயற்சியில் தீவிரம்

ADDED : ஜன 04, 2024 01:53 AM

பெரியபட்டினம்: -பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சியில், கிராமங்களை பசுமையாக்கும் முயற்சியில் அரியவகை மரக்கன்றுகள் ரூ.10க்கு விற்கப்படுகிறது.
வண்ணாங்குண்டு ஊராட்சி நெய்தல் நாற்றுப்பண்ணை கடந்த 2022ல் அமைக்கப்பட்டது.
ஐந்து ஏக்கரில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரிய வகை மரக்கன்றுகளை வளர்த்து அவற்றினை திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட 33 ஊராட்சிகளிலும் குறைந்த விலையில் வினியோகம் செய்கின்றனர்.
100 நாள் வேலை திட்ட பெண்கள் மூலம் நர்சரி பராமரிக்கப்படுகிறது.
ஊராட்சி தலைவர் தியாகராஜன் கூறியதாவது: 33 கிராம ஊராட்சிகளில் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. ஆணைப்புளி, வெட்பாலை, பூவரசு, கொடுக்காப்புளி, வாகை, ரோஸ்வுட், பூவரசு, வேம்பு, வெடிவேம்பு, நீர்மருது, மாஞ்சியம், பாதாம், கொய்யா, பப்பாளி உள்ளிட்ட மரக்கன்றுகளை ரூ. பத்துக்கு விற்கிறோம். மக்கள் ஆர்வமாக மரக்கன்றுகளை வாங்கி செல்கின்றனர்.
கடற்கரையோரங்களில் வளரக்கூடிய அரிய வகை மரங்களும் உள்ளது என்றார்.