/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இ.எல்., சரண்டர் நடப்பு ஆண்டில் அமல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு

ADDED : ஏப் 29, 2025 05:06 AM
ராமநாதபுரம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இ.எல்., சரண்டர் நடப்பாண்டில் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளதை தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. சங்கத்தின் மாநில நிறுவன தலைவர் கிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு. இ.எல்., சரண்டர் இந்த ஆண்டே அமல். வரும் அக்., முதல் 15 நாட்களுக்குப் பெறலாம். பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்வு. திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு.
பழைய பென்ஷன் திட்டம் தொடர்பாக குழுவின் அறிக்கை செப்.,ல் பெறப்படும். சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 உயர்வு ஆகியவற்றை சட்ட சபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வருக்கு எங்கள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.