ADDED : செப் 09, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை அருகே உள்ள தென்னந்தோப்பில் தாயுடன் 13 வயது பள்ளி மாணவி வசிக்கிறார். நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த ஏழாம் வகுப்பு மாணவியிடம் கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த தென்னந்தோப்பில் கணக்காளராக வேலை செய்யும் ஹாஜா முகைதீன் 75, சிறுமிக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து சிறுமி தாயிடம் கூறியதையடுத்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியாவிடம் தாய் புகார் அளித்தார். இதையடுத்து ஹாஜா முகைதீன் 75, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
