/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டையால் அடித்து முதியவர் கொலை; மது போதையில் விபரீதம்
/
கட்டையால் அடித்து முதியவர் கொலை; மது போதையில் விபரீதம்
கட்டையால் அடித்து முதியவர் கொலை; மது போதையில் விபரீதம்
கட்டையால் அடித்து முதியவர் கொலை; மது போதையில் விபரீதம்
ADDED : ஜூலை 29, 2025 11:08 PM
கீழக்கரை; உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிய முதியவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
ஏர்வாடி வெட்டன்மனையை சேர்ந்தவர்கள் பால்ராஜ் 35, அமிர்தலிங்கம் 33, பால முருகன் 23, கூலித்தொழிலாளிகளான மூவரும் உறவினர்கள். இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த செய்யது முகமது புகாரி 68, சேர்ந்து பாலமுருகன் வீட்டில் நேற்று முன்தினம் மதியம் மது அருந்தினர். மது அருந்திய உறவினர்கள் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. போதை அதிகமான நிலையில் பாலமுருகன் 23, கட்டையால் பால்ராஜ், அமிர்தலிங்கம் தலையில் அடித்தார்.
இதை தடுத்த செய்யது முகமது புகாரியையும் ஓங்கி தலையில் அடித்தார். மயங்கி விழுந்த முதியவர் செய்யது முகமது புகாரியை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். ஏர்வாடி போலீசார் பாலமுருகன் உள்ளிட்ட மூவர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.