ADDED : ஆக 23, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நயினார்கோவில் ரோடு மதுரை புறவழிச்சாலையில் நேற்று அதிகாலை குமரியேந்தல் கிராமத்தை சேர்ந்தசடையாண்டி 70, நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதியதில் அவர்காயமடைந்தார்.அப்பகுதியில் சென்றவர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர்.
ராமநாதபுரம் பஜார் போலீசார் முதியவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். முதியவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.போலீசார் முதியவரின் மீது மோதிய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.