/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் முதியவருக்கு ஓராண்டு சிறை
/
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் முதியவருக்கு ஓராண்டு சிறை
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் முதியவருக்கு ஓராண்டு சிறை
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் முதியவருக்கு ஓராண்டு சிறை
ADDED : நவ 12, 2025 10:50 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரத்தை சேர்ந்தவர் முத்துமணி 65. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கோட்டைகிழவன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. 2024 ல் கண்மாயில் மீன்பிடித்து கொண்டிருந்த கோட்டைகிழவன் பேரன்களை முத்துமணி ஜாதிப் பெயரை கூறி திட்டியுள்ளார்.
அவர்கள் வீட்டிற்கு சென்று பாட்டி பானுமதியிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முத்துமணி குடும்பத்தினரிடம் புகார் தெரிவிக்க சென்ற பானுமதியையும் தாக்கி, ஜாதிப்பெயரை கூறி முத்துமணி திட்டியுள்ளார். பானுமதி சாயல்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து முத்துமணியை கைது செய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன்ராம் பெண்ணை ஜாதியை சொல்லி திட்டி தாக்கிய முத்துமணிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

