/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபத்தில் முதியவர் வெட்டி கொலை: தொழிலாளி கைது
/
மண்டபத்தில் முதியவர் வெட்டி கொலை: தொழிலாளி கைது
ADDED : ஆக 20, 2025 02:59 AM

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ஆட்டுக்கு மரக்கிளை வெட்டிய முதியவரை கொலை செய்த கூலிதொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மண்டபம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் கணபதி 40. இவர் மண்டபத்தில் கருவாடு கடையில் கூலி வேலை செய்கிறார். இவர் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு செயல்படுவார் என அப்பகுதியினர் கூறுகின்றனர். இந்நிலையில் இதே தெருவை சேர்ந்த பெரியகருப்பன் 85, தனது ஆட்டுக்கு இரை கொடுக்க கணபதி வீட்டின் வளாகத்தில் இருந்த மரக்கிளைகளை வெட்டினார்.
அப்போது கணபதி, முதியவரிடம் இருந்த அரிவாளை பறித்து அவரை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் விழுந்த பெரியகருப்பனை உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். கணபதியை மண்டபம் போலீசார் கைது செய்தனர்.