ADDED : மார் 17, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: உச்சிப்புளி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் 65. இவர் நேற்று முன்தினம் இருமேனி கிராமத்தில் இருந்து டூவீலரில் மதுரை--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பினார்.
அப்போது ராமேஸ்வரம் நோக்கி சென்ற ஷ்யாம் பாபு 26, டூவீலர் மீது மோதினார். இதில் ஆறுமுகம் காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.
