/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் மோதிய விபத்தில் நடந்து சென்ற முதியவர் பலி
/
டூவீலர் மோதிய விபத்தில் நடந்து சென்ற முதியவர் பலி
ADDED : அக் 23, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நிறையரசு 70. இவர் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு மங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது ஆர். எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து தேவிபட்டினம் நோக்கி சென்ற டூவீலர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நிறையரசு, டூவீலரை ஓட்டிச் சென்ற திருத்தேர்வளை அஜித் 25, ஆகியோர் ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நிறையரசு இறந்தார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

