/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கைவிரல் ரேகை பதிவாகவில்லை ரேஷனில் முதியோர் தவிப்பு
/
கைவிரல் ரேகை பதிவாகவில்லை ரேஷனில் முதியோர் தவிப்பு
கைவிரல் ரேகை பதிவாகவில்லை ரேஷனில் முதியோர் தவிப்பு
கைவிரல் ரேகை பதிவாகவில்லை ரேஷனில் முதியோர் தவிப்பு
ADDED : ஜன 22, 2024 04:53 AM
திருவாடானை: முதியோர்களுக்கு கைவிரல் ரேகை அழிந்துள்ளதால் ரேகை பதிவாகாததால் தவிக்கின்றனர். இதனால் அரசு நலத் திட்ட உதவிகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை பெறுவதில் ஏராளமான முதியவர்கள் உள்ளனர்.
80 வயதை கடந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு கைவிரல் ரேகை அழிந்துள்ளது. கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களில் பயனடைவோர் வயதான காலத்தில் கைகள் தளர்ந்து சுருக்கம் விழுந்துள்ளது. பலரது கைரேகை அழிந்துவிட்டது. ஆதார் அட்டையில் கைவிரல் ரேகை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதால் ஏராளமான முதியவர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள சேவை மையத்திற்கு செல்கின்றனர்.
அங்கு கைவிரல் ரேகை பதிவு செய்யும் போது ஒத்துப்போகவில்லை. அங்குள்ள பணியாளர்கள் முதியவர்களின் கைவிரலை ரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் அழுத்தி வைத்தாலும் பதிவாகவில்லை.
நடக்க முடியாமல் வீட்டில் முடங்கியிருக்கும் வயதானவர்களுக்கு ரேகை பதிவாகாத பட்சத்தில் மாற்று வழியாக ஏதாவது ஒன்றை ஏற்பாடு செய்து அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.