ADDED : ஆக 06, 2025 08:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை முருகம்மாள் 80. இவர் ஆக.,3ல் திரவுபதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவில் வீடு திரும்புவதற்காக புல்லமடை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது டூவீலர் மோதியதில் மூதாட்டி காயம் அடைந்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முருகம்மாள் நேற்று இறந்தார். டூவீலரை ஓட்டி வந்த ராமநாதமடை சித்திரைவேலு மகன் சூர்யா மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.