தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேர்தல் விழிப்புணர்வு

 தேர்தல் விழிப்புணர்வு

 தேர்தல் விழிப்புணர்வு


ADDED : ஜன 26, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடப்பதை முன்னிட்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிராமங்கள் தோறும் சென்று வாகனங்களில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடமாடும் வாகன சேவைதுவக்கப்பட்டுள்ளது. நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் தலா ஒரு வாகனம் மூலம் தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஊரக, நகர்ப்புற பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

வாகனங்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேற்று துவக்கி வைத்தார். இந்த வாகனங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், விவிபேட் உள்ளிட்டவை இருக்கும். புதிதாக வாக்களிப்போர் இதன் மூலம் வாக்களிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் ரங்கோலி போட்டி நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us