ADDED : ஏப் 04, 2026 07:39 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட வாகனத்தில் வாக்காளர் விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி ராநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.
வாக்களிப்பதன் அவசியம், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன. வாகன ஓட்டுநர்கள் துண்டுபிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களுடன் செல்பி எடுத்தனர்.
