ADDED : மே 11, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் பட்டதாரி--முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள்தேர்வு நடந்தது.
விருதுநகர் மாவட்டத்தலைவர் வேலுச்சாமி முன்னின்று தேர்தலை நடத்தினார். இதில் புதிய ராமநாதபுரம் மாவட்டத்தலைவராக செந்தில்குமார், செயலாளராக காளிராஜூ, பொருளாளராக புதுராஜா, அமைப்பு செயலாளராக அருளானந்துசாமி, மாவட்ட துணைத்தலைவர்களாக ஆரோக்கியசகாயதாஸ், கண்ணபிரான், மாவட்ட துணைச்செயலாளர்களாக முத்துக்குமார், செல்லம், மகளிரணி செயலாளராக குளோரிடா ரபெக்ஸ், மகளிரணி இணை செயலாளராக சத்யபாமா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாநில செயலாளர் சரவணன் பாராட்டு தெரிவித்தார்.