/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் பாதுகாப்பு அணிவகுப்பு ஊர்வலம்
/
தேர்தல் பாதுகாப்பு அணிவகுப்பு ஊர்வலம்
ADDED : மார் 16, 2026 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதியில் தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி., கணேசன் தலைமை வகித்தார்.
கமாண்டர் கில்லே மிஸ்ரா,இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், சுதர்சன், ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தனர். மத்திய ஆயுதப்படை சேர்ந்த 60 பேர், தமிழக ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என 100 பேர் கலந்து கொண்டனர். கமுதி பஸ் ஸ்டாண்டில் துவங்கி மருது பாண்டியர் சிலை, நாடார் பஜார், வாரச்சந்தை வழியாக சிங்கபுலியாம்பட்டி வரை ஊர்வலமாக சென்றனர். உடன் தமிழக போலீசார், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.

