/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் பயிற்சி மையங்கள் ஆய்வு
/
தேர்தல் பயிற்சி மையங்கள் ஆய்வு
ADDED : பிப் 22, 2026 07:39 AM
திருவாடானை: திருவாடானை தொகுதியில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது.
திருவாடானை சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் காசி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆண்டி ஆகியோர் திருவாடானை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருவாடானை அரசு கலைக் கல்லுாரி, சின்னக்கீரமங்கலம் தனியார் பள்ளி ஆகிய இரண்டு இடங்களையும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அங்குள்ள வகுப்பறைகளின் எண்ணிக்கை, மின்சார வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.

