ADDED : மார் 03, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானையில் த.வெ.க., சார்பில் தேர்தல் பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமை வகித்தார்.
சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோசப் கலந்து கொண்டு தேர்தல் கண்காணிப்பு குழு தலைவராக தொண்டர்களிடம் தேர்தல் நேரத்தில் பூத் ஏஜன்டுகள் எப்படி செயல்பட வேண்டும், முறைகேடுகளைத் தடுப்பது எப்படி, மற்றும் கவனமுடன் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கி பேசினார். ஒன்றிய செயலாளர் சரண் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
