ADDED : மார் 24, 2026 04:59 AM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி (தனி) சட்ட சபை ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். அப்போது 2026 சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு எடுத்துரைத்தார்.
பரமக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவண பெருமாள், தாசில்தார்கள் வரதன், ராமமூர்த்தி மற்றும் அனைத்து அலுவலர்கள் பங்கேற்றனர்.
