/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாய் பாலத்தில் மின் விளக்குகள் அவசியம்
/
பெரிய கண்மாய் பாலத்தில் மின் விளக்குகள் அவசியம்
ADDED : டிச 10, 2024 04:56 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சிவகங்கை மாவட்ட கிராமங்களுடன் இணைக்கும் இணைப்பு பாலமாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் குறுக்கே செல்லும் பெரிய கண்மாய்ப் பாலம் விளங்குகிறது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தால் நுாறுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர்.
இந்நிலையில் பாலம் அமைந்துள்ள பகுதியில் மின்விளக்குகள் இன்றி இரவில் இருள் சூழ்ந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படும் நிலை உள்ளது. மேலும் பெரிய கண்மாய் பாலத்தில் இருந்து செட்டியமடை வரையிலும், ரோட்டில் மின் விளக்குகள் பழுதடைந்து இருள் சூழ்ந்துள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெரிய கண்மாய் பாலம் மற்றும் செட்டியமடை ரோட்டில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.