/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் பகலில் ஒளிரும் மின் விளக்குகள்
/
பாம்பன் பாலத்தில் பகலில் ஒளிரும் மின் விளக்குகள்
ADDED : மார் 18, 2025 06:52 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் பகலில் ஒளிரும் மின் விளக்குகளால் மின்சாரம் வீணாகி சிக்கனம் கேள்விகுறியாகியுள்ளது.
பாம்பன் கடலில் 1988ல் அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். துவக்கத்தில் பாலத்தின் இருபுறமும் 400க்கு மேலான மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது. காலப்போக்கில் மின்விளக்குகள் பராமரிப்பின்றி கடந்த இரு ஆண்டுகளாக 95 சதவீதம் மின்விளக்குகள் பழுதாகி பாலம் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பாலத்தை கடந்து சென்றனர்.
இதையடுத்து இரு மாதங்களுக்கு முன்பு பாலத்தின் இருபுறமும் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலித்தது. ஆனால் புதிய மின் விளக்குகளும் கவனிப்பாரின்றி பகலிலும் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே பாம்பன் பாலத்தில் மின் விளக்குகளை பராமரிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.